Connect with us

பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டே சென்ற மாணவன், கால் கட்டை விரல் துண்டாகிப் போன பரிதாபம்

bus

செய்திகள்

பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டே சென்ற மாணவன், கால் கட்டை விரல் துண்டாகிப் போன பரிதாபம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு பள்ளியில் பயிலும் மாணவன் அரசு பேருந்தில் பயணித்த போது விபத்துக்குள்ளாகி கால் விரல் துண்டான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அங்கிருந்து மருத்துவர்கள் அந்த மாணவனுக்கு உரிய சிகிச்சை அளிக்காத நிலையில் அங்கு வந்த பார்த்த புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா மாணவனின் நிலையை கண்டு ஆத்திரமடைந்து மருத்துவர்களை அழைத்து உடனடியாக அந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்க வைத்த நிகழ்வு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் இன்று தனது உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மாணவர்களோடு ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில் நடைபெற்ற குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்றான். அப்போது அந்த மாணவர்கள் பயணித்த அரசு பேருந்தில் அதிக அளவிலான கூட்டம் இருந்ததால் மாணவன் கார்த்திக் படிக்கட்டில் தொங்கியபடியே வந்தபோது கே. ராசியமங்கலம் என்னும் இடத்தில் இருந்த வேகத்தடையில் மாணவனின் கால் உரசியதில் அவனது விரல் துண்டானது.

உடனடியாக சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவனை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் அந்த மாணவனின் நிலையை கூட பார்க்காமல் எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளாமல் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த மருத்துவமனைக்கு அப்போது வேறு ஒரு நோயாளியை பார்க்க வந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மாணவனின் நிலை குறித்து அறிந்து உடனடியாக மாணவன் இருந்த வார்டுக்கு சென்று பார்த்தபோது இரண்டு மணி நேரமாக அந்த மாணவனுக்கு எந்த வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவும் ஒரு மருத்துவர் என்பதால் உடனடியாக அங்கு பணியில் இருந்த மருத்துவரிடம் மாணவனின் சிகிச்சை விவரம் குறித்து கேட்டபோது மாணவனுக்கு அந்த மருத்துவர்கள் இரண்டு மணி நேரமாக எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

இதனால் வேதனை அடைந்த மருத்துவர் முத்துராஜா உடனடியாக பணியில் இருந்த மருத்துவர்கள் அனைவரையும் அழைத்து உடனடியாக அந்த மாணவன் கார்த்திக்குக்கு சிகிச்சையை தொடங்க வலியுறுத்தியதோடு தான் ஒரு மருத்துவர் என்றாலும் தற்போது சட்டமன்ற உறுப்பினர் என்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இது போல் பணியில் அலட்சியம் காட்டுவது தனக்கு வேதனை அளிப்பதாகவும் இனியாவது அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை நிலை அறிந்து அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அதன் பின்பு அந்த மாணவனுக்கு தீவிரமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவின் இந்த செயல் அங்கிருந்த மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top