தேங்காய் பறிக்க அழைத்து சென்ற ஐ.டி.ஐ. மாணவன் – மின்சாரம் தாக்கி பலி!!

பண்ருட்டி அருகே தேங்காய் பறிக்க சென்ற ஐடிஐ மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள வாணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் அரசு என்பவர் பண்ருட்டியில் உள்ள தனியார் ஐடிஐ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

அடுத்த 3 மணி நேரத்தில்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

இந்நிலையில் ஐடிஐ-யில் பணிபுரியும் ஆசிரியர் பிரபாகரன் என்பவர் உறவினர் வீட்டுற்கு செல்வதால் தேங்காய் பறிப்பதற்காக மாணவனை அழைத்து சென்றுள்ளார். அப்போது தேங்காய் பறிக்கும் போது மின்சாரம் தாக்கி மாணவர் அரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

இன்று ஒரு நாள் மட்டும்!! இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவரின் மரணத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.