புதிய உத்தரவு: இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்காமல் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்!!
தற்போதைய ரேஷன் கடைகளில் நவீன முறையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக நம் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புகளை இந்த மாத இறுதி வரையிலும் வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதன் விளைவாக பல ரேஷன் கடைகளில் தொடர்ச்சியாக மக்கள் கூட்டம் கூட்டமாக பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்கி செல்கின்றனர். தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் தான் பதிவுசெய்யப்படுகிறது. ஆனால் பல இடங்களில் நெட்வொர்க் பிரச்சினையால் பயோமெட்ரிக் முறை முறையாக செயல்படவில்லை.
இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்காமலேயே திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்கு தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உணவுப் பொருட்கள் நுகர்வோர் மற்றும் வழங்கல் துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பயோமெட்ரிக் முறை செயல்படவில்லை என்றாலும் நுகர்வோருக்கு பொருட்கள் வழங்குவதில் எந்த தாமதமும் தடையும் இருக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் திருப்பி அனுப்பப்படும் சம்பவங்கள் நிகழாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
