Connect with us

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக ஐ.டி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! எப்படி தெரியுமா?

work 1595397700

News

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக ஐ.டி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! எப்படி தெரியுமா?

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக ஐ.டி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! எப்படி தெரியுமா?

உக்ரைன் – ரஷ்யா நாடுகளில் 8- வது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து பல நாடுகள் கண்டனங்கள் தெரிவித்தும் பல இணையதள சேவைகளும் முடக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகளில் சுமார் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ஐ.டி பணியிடங்கள் போரின் விளைவாக பாதிக்கப்பட்டு வேறு நாடுகளுக்கு மாற்றப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ரஷ்யா மற்றும் அதன் தோழமை நாடான பெலாரஸ் மீது அமெரிக்கா, இதர நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக அங்கு ஐடி துறை கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனில் டிஜிட்டல் பொறியியல் துறையில் சுமார் 30,000 ஐ.டி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 20000 பேர் பன்னாட்டு வர்த்தக சேவை துறையில் பணியாற்றுகின்றனர்.

இதேபோல பெலாரஸ், ரஷ்யாவில் 20,000 பேர் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுகின்றனர். மேலும் 20,000 பேர் பன்னாட்டு வர்த்தக சேவை துறையில் பணியாற்றுகின்றனர்.

இந்த பணியிடங்களில் இந்தியாவிற்கு சுமார் 70% வேலைகள் இந்தியாவிற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக எவரெஸ்ட் குழுமம் நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

போர் மேலும் உக்கிரமடைந்தால் விளைவாசி உயர்வு காரணமாக ஐ.டி சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கும் என்று  இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top