தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று, நாளை இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளி மண்டல கீழடுக்கு மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாக கூடும் என தெரிவித்துள்ளது.
அதேபோல் நாளை தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
வருகின்ற 28, 29ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளது.