Connect with us

நாளை, நாளை மறுநாள் இந்த மாவட்டங்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!

rain

தமிழகம்

நாளை, நாளை மறுநாள் இந்த மாவட்டங்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!

நாளை, நாளை மறுநாள் இந்த மாவட்டங்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!

தெற்கு வங்ககடல் பகுதியின் மத்தியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாளை டெல்டா மாவட்டங்கள், புதுகோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வருகின்ற 5- ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள்,கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர்,பெரம்பலூர், திருச்சி புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை மற்றும் நாளை மறுநாளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top