Connect with us

நாளை, நாளை மறுநாள் இந்த மாவட்டங்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!

202201271453592437 Tamil News Tamil News Rain likely chance to 5 days in Tamil Nadu SECVPF 1

தமிழகம்

நாளை, நாளை மறுநாள் இந்த மாவட்டங்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!

நாளை, நாளை மறுநாள் இந்த மாவட்டங்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!

இது தொடர்பாக சென்னை வானிலைமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

வளிமண்டல சுழற்ச்சி காரணமாக தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பிப்ரவரி 18ல் தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து வருகின்ற 19, 20- ஆம் தேதிகளில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top