Connect with us

குஷியோ குஷி!! நாளை இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்…

rain

தமிழகம்

குஷியோ குஷி!! நாளை இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்…

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளைய தினத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது. இதனை தொடர்ந்து ஈரோடு, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top