நாளை இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்- வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் நாளைய தினத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கலைமாமணி விருதுகள்: விசாரணை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு!

நாளைய தினத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கூறியுள்ளது.

வருகின்ற 4 முதல் 6-ம் தேதி வரையில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது – உச்சநீதிமன்றம் அதிரடி!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.