நாளை தென்மாவட்டங்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நாளை தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையை பொருத்த வரையில்அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
