Connect with us

உஷார்!! உஷார்!! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்;

rain

தமிழகம்

உஷார்!! உஷார்!! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்;

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பெய்து வருவதால் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் குளிர்ச்சி நிலவியது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. அதே போல் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

வருகின்ற 27,28 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

மேலும், தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top