தமிழத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்..
தமிழகத்தின் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. இந்நிலையில் தமிழத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மன்னர் வளைகுடா, தமிழ்நாட்டின் உள்பகுதிகளின் மீதான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
இதனிடையே தென்காசி, திருநெல்வேலி, தேனி போன்ற மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்ய கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
புதுவை, காரைக்கால், கன்னியாகுமரி, நெல்லை போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பகல் நேரங்களில் இயல்பைவிட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் அதிகமாக வெளியில் போவதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் கூறியுள்ளது.
