
Tamil Nadu
அடடே..! காலையிலே மழையா.. அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்யும்;;
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் படி, இன்றைய தினத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை நீட்டிக்கும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
