
தமிழகம்
எச்சரிக்கை: அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாப்புள்ளதாக சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்ய உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த மாதம் தொங்கிய கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் அமைதி அடைந்த நிலையில் தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
