Connect with us

கோடை வெயிலை அணைத்த கனமழை: 10 மாவட்டங்களில் பெய்யும் !!

rain

தமிழகம்

கோடை வெயிலை அணைத்த கனமழை: 10 மாவட்டங்களில் பெய்யும் !!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

நாளைய தினத்தில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

மேலும், பல்வேறு மாவட்டங்களில் கோடைமழை பெய்துவரும் நிலையில் 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top