Connect with us

வெளியே போகாதீங்க மக்களே!! வானிலை மையம் எச்சரிக்கை;;

rain 2

Tamil Nadu

வெளியே போகாதீங்க மக்களே!! வானிலை மையம் எச்சரிக்கை;;

தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தி.மலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாக கூறியுள்ளது.

அதே போல் தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

மேலும், இன்று அரபிக் கடல் தென் கிழக்கு, மத்திய பகுதி, கேரளா, லட்சத்தீவு, கர்நாடக கரையோரம் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top