Connect with us

குஷியோ குஷி!! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்…

rain 2 2

தமிழகம்

குஷியோ குஷி!! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்…

தமிழகத்தில் பல மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன் படி, டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் நாளை தமிழகத்தில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வருகின்ற 24,25,26-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், சென்னையை பொறுத்த வரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top