Connect with us

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!

rain chennai4101 1638687228

செய்திகள்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!!

கேரள கடலோர பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று  9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே  மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான  கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொருத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top