அப்துல்கலாம் ஜனாதிபதி ஆவதை தடுத்தது திமுக தான்: அண்ணாமலை

b99c4e59b3c354adcdac36c534b649b3

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக விடாமல் தடுத்தது திமுக தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அப்துல்கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தவர் அப்துல்கலாம் என்றும் விஞ்ஞானத்திற்கு வளம் சேர்த்தவர் என்றும் அவரை இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக ஆவதை சில தடுத்தனர் என்றும் இதில் திமுக முக்கிய அங்கம் எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பாஜக கூட்டணியில் அதிமுக இருப்பதால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை உரிமையாளர் நேற்று டெல்லியில் சந்தித்ததாகவும் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை செல்போன் ஒட்டுக்கேட்பு என்ற சர்ச்சை ஆதாரம் இல்லாதது என்றும் இதனை திட்டமிட்டு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment