Connect with us

பாரதியார் கனவை நிறைவேற்றியது திராவிட மாடல் – சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு சாட்டையடி

அப்பாவு

தமிழகம்

பாரதியார் கனவை நிறைவேற்றியது திராவிட மாடல் – சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு சாட்டையடி

பாரதியார் கண்ட கனவு நிறைவேற்றியது தான் திராவிட மாடல் – சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பேச்சு… மகாகவி பாரதியாரின் 101 வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் மணிமண்டத்தில் பாரதியார் சிலைக்கு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பாரதியார் மணிமண்டபத்தில் நடந்த மகாகவி பாரதியாரின் நினைவு நாள் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்துகொண்ட சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு புத்தகத்தை வெளியிட்டார் பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில் :

பெண் விடுதலைக்காக குரல் கொடுத்தவர் மகாகவி பாரதியார் முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் இருக்கும் போது பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் தற்போது உள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் மேலும் படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு என பல்வேறு திட்டங்களையும் அறிவித்துள்ளார் இதுதான் திராவிட மாடல் எனக்கு அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் இதைத்தான் பாரதி கனவு கண்டார் எனவும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top