தமிழக மக்களுக்கும் கர்நாடக மக்களுக்கும் பெரும் பிரச்சனையாக காணப்படுகிறது காவிரி நீர் விவகாரம். இது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தஞ்சாவூரில் உரையாற்றியுள்ளார். நம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாள்தோறும் புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறார். அவற்றை நேரடியாகவோ அல்லது காணொலி மூலமாகவோ திறந்து வைத்து வருகிறார்.
இன்று தஞ்சாவூரில் ரூபாய் 894 கோடி மதிப்பிலான 134 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தஞ்சையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ரூபாய் 98.7 கோடியில் 90% முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்.
தமிழ் நாட்டுக்கு எவ்வளவு காவிரி தண்ணீர் வழங்க வேண்டும் என்பதை நிர்ணயித்து அறிவிக்க செய்தவரும் கலைஞர்தான் என்றும் கூறினார். காவிரி நடுவர் மன்றம் அமைக்க வைத்தவர் கலைஞர் தான் என்றும் உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான் காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பு கிடைத்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்