Connect with us

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? – வானிலை மையம் தகவல்!!

rain 2

தமிழகம்

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? – வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சி நிலவுகிறது. இந்நிலையில் நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் நாளை வடதமிழகம், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, குமரி, புதுச்சேரி பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் வருகின்ற 15 முதல் 17-ம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top