Connect with us

கோலிவுட்டில் பரபரப்பு!! அன்புச்செழியன் டூ எஸ்.ஆர்.பிரபு வரை அடுத்தடுத்து சிக்கிய தயாரிப்பாளர்கள்… காரணம் என்ன?

producers

பொழுதுபோக்கு

கோலிவுட்டில் பரபரப்பு!! அன்புச்செழியன் டூ எஸ்.ஆர்.பிரபு வரை அடுத்தடுத்து சிக்கிய தயாரிப்பாளர்கள்… காரணம் என்ன?

பிரபல சினிமா தயாரிப்பாளர்களான அன்பு செழியன், கலைப்புலி தாணு, எஸ் ஆர் பிரபு, ஞானவேல் ராஜா, ஆகியோருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பிரபல தயாரிப்பாளர்களான அன்புச்செழியன் கலைப்புலி தானு, எஸ் ஆர் பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல்  வருமான வரிதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச் செழியனுக்கு சொந்தமான மதுரை மட்டும் சென்னையில் உள்ள அவரது அலுவலகங்கள் இல்லங்களில் சோதனை நடைபெற்று வருகிறது குறிப்பாக சென்னை தி நகர் ராகவையா சாலையில் உள்ள கோபுரம் பிலிம்ஸ், நிறுவன அலுவலகம் அதே சாலையில் உள்ள அன்புச் செழியன் இல்லம், நுங்கம்பாக்கம் காம்தார் தெருவில் உள்ள அன்புச் செழியன் உறவினர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

தி நகர் பிரகாசம் சாலையில் உள்ள தயாரிப்பு நிறுவன அலுவலகம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவனியில் உள்ள இல்லம் என கலைப்புலி தானுவிற்கு சொந்தமான இரண்டு இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபு மற்றும் ஞானவேல் ராஜா ஆகியோரின் இரு தயாரிப்பு நிறுவன அலுவலகங்கள் தி நகர் தனிகாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வருகிறது அங்கும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பிரபல சினிமா தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அஜித் நடித்த விசுவாசம் பட தயாரிப்பாளரான சத்தியஜோதி பிலிம்ஸ் அலுவலகம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இயங்கி வருகிறது.

குறிப்பாக திரைத்துறை சார்ந்த பிரபல தயாரிப்பாளர்களை குறி வைத்து இன்று காலை முதல் நடைபெற்று வரும் இந்த வருமான வரித்துறை சோதனையானது வரியைப் புகாரி அடிப்படையில் நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள் தயாரிப்பு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் தொடர்பாகவும் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் கணக்குகள் தொடர்பாகவும் வருமானவரித்துறையினர் ஆவணங்களை சரி பார்த்து சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தவிர ரொக்கப் பணம் அதிகம் புழங்கும் இடமாக திரைத்துறை உள்ளதால் கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம் தொடர்பாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெற்று வரும் ஓரிரு இடங்களில் பணம் எண்ணும் இயந்திரங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்வது இதை உறுதி செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top