தமிழகத்தில் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் ஒருவராக சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1969 ஆம் ஆண்டு சாதாரண பாத்திர கடையாக தோன்றி இன்று மிகப்பெரிய சூப்பர்மார்க்கெட், மால்களாக உருவாக்கியுள்ளது சூப்பர் சரவணா ஸ்டோர்.
இந்த நிலையில் சூப்பர் சரவணா ஸ்டோரில் கடந்த சில நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு சரவணா ஸ்டோர் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 434 கோடி கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோரின் கடைகளில் நான்கு நாட்களாக ஐடி ரெய்டு நடைபெறுகிறது. அதன்படி சென்னை புரசைவாக்கம், தியாகராஜ நகரில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடை, அலுவலங்களில் 4-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
அதோடு குரோம்பேட்டை, போரூர் ஆகிய பகுதிகளிலும் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளிலும் 4-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.