
தமிழகம்
முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை.!!
பத்தாண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது திராவிட முன்னேற்ற கழகம். திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து வருமான வரி மற்றும் லஞ்ச ஒழிப்பு வரையினரின் சோதனை நடத்தப்பட்டது.
அதிலும் குறிப்பாக விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், எஸ்பிக்கள் வீடுகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி திருவாரூர் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் மன்னார்குடியில் உள்ள வீட்டில் சோதனை நடக்கிறது. காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
காமராஜரின் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களின் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
