
தமிழகம்
தேட தேட கிடைத்த தங்கம்! ஐடி சோதனையில் கட்டு கட்டாக பணம் பறிமுதல்!!
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு வருமானவரி சோதனையானது தொடர்ந்து நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் ஜெயபாரத் கட்டுமான நிறுவன பங்குதாரர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இதில் கட்டு கட்டாக பணம் கிடைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. அவனியாபுரம் ஜெயபாரத் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் பணம், தங்கம் மற்றும் ஆவணங்கள் சிக்கின. வரியைப்பு செய்ததாக ஜெயபாரத் கட்டுமான நிறுவன பங்குதாரர்கள் வீடுகளில் 13 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடந்தது.
அழகர் மற்றும் முருகன் வீடுகளில் சோதனை இட்டு அதிகாரிகள் பணம் என்னும் இயந்திரத்தை வரவைத்து கணக்கிட்டு வருகின்றனர். ஹைதராபாத்தில் இருந்து கணினி மின் பொறியாளர் வரவழைக்கப்பட்டு ஹார்ட் டிஸ்க்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
நகை மதிப்பீடாளர்கள் குழுவினரை வரவழைத்து நகைகளை மதிப்பீடும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. ஜெயபாரத் கட்டுமான நிறுவனம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு நெருக்கமானவர்க்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மாலை வரை சோதனை தொடரும் என வருமானவரித்துறை தகவல் அளித்துள்ளது. 20 ஆண்டுகளாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயபாரத் நிறுவனத்தில் வருமானவரி சோதனை நடப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
