தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு வருமானவரி சோதனை அதிக அளவு நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர்கள் சொந்தமான அலுவலகங்கள், வீடுகளில் தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தினம் தொடர்ந்து இரண்டாவது நாளாக காலனி தொழிற்சாலைகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான 60க்கு மேற்பட்ட தோல் காலனி ஆலைகளில் இரண்டாவது நாளாக ஐடி சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 60 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட உள்ளனர்.
கே எச் குழுமம் மற்றும் பரிதா குழுமத்தில் வருமானவரி துறையினர் சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர். சென்னையில் ஆயிரம் விளக்கு, சென்னீர்குப்பம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடந்து கொண்டு வருகிறது. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள கே எச் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை பெரியமேடு, பெரியண்ணா மேஸ்திரி தெருவில் உள்ள பரிதா காலனி தொழிற்சாலையில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. வேலூர் பெருமுகையில் உள்ள கே எச் காலனி தயாரிக்கும் தொழிற்சாலையிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை புறவழி சாலை அருகே உள்ள கே எச் காலனி தயாரிக்கும் தொழிற்சாலையிலும் வருமான வரித்துறை சோதனை நடத்திக் கொண்டு வருகின்றனர். நிறுவனங்கள், தொழிற்சாலை ஊழியர்களுக்கு காப்பீட்டு தரும் முகவராக செயல்படும் நிறுவனத்தில் சோதனை நடைபெறுகிறது.