ஸ்மார்ட் சிட்டி ஊழல்… ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் ஐடி ரெய்டு!!

ஒப்பந்ததாரர் பாண்டித்துரைக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வந்ததாக தெரிகிறது. இதனிடையே பணியில் இருக்கும் போது உயிரிழந்த காரணமாக, அவரது மகன் பாண்டியன் கருணை அடிப்படையில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒப்பந்ததாரராக பணியாற்றியபோது ஈபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பல்வேறு ஊழல் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் படி, சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment