இது முதல்முறை அல்ல! லேடி இன்ஸ்பெக்டருக்கு முதல்வர் பாராட்டு!!

கல்லறைத் தோட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர்-தோளில் தூக்கி வந்த பெண் இன்ஸ்பெக்டர்!

இன்றைய தினம் காவல்துறையின் மிக சிறப்பான பணி ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவியது. குறிப்பாக பெண் காவலருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏனென்றால் நேற்றைய தினம் சென்னையில் டிபி சத்திரம் பகுதியில் கல்லறை தோட்டம் அருகே மரங்கள் விழுந்ததில் 30 வயது இளைஞர் மயங்கி கிடந்தார்.

அதை கண்ட அங்குள்ள பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அந்த இளைஞரை தனது தோளில் தூக்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றி உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தார். அவருக்கு இணைய தளத்தில் வாழ்த்துகள் வந்து கொண்டே உள்ளன.

பெண் இன்ஸ்பெக்டர்

இந்த நிலையில் இதனை கண்ட தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் அவரைப் பாராட்டி உள்ளார். சென்னை கீழ்பாக்கம் கல்லறையில் சுயநினைவின்றி கிடந்த உதயா என்பவரை காப்பாற்றிய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டு என்று கூறியுள்ளார்.

ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்துசென்று மருத்துவமனைக்கு அனுப்பி உயிர் பிழைத்துள்ளார். ஆய்வாளரின் அர்ப்பணிப்பு மிக்க கடமை உணர்வும், ஈர இதயத்தின் வெளிப்பாடும் போற்றுதலுக்குரியவர் என்றும் முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

தடகள போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக சாதனைகள் பல புரிந்தவர் ஆய்வாளர் ராஜேஸ்வரி என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின்

1992 ஆண்டு கும்பகோணம் மகாமக நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றியவர் ஆய்வாளர் ராஜேஸ்வரி என்பதும் குறிப்பிடத்தக்கது. காவல் பணியில் எளிய மக்களின் துயர் துடைக்கும் கரங்ககளாக ஆய்வாளர் ராஜேஸ்வரி செயல்பாடு அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார் ஸ்டாலின்.

ஆய்வாளர் ராஜேஸ்வரியின் செயல்பாடு காவல்துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளதாக பாராட்டியுள்ளார். கம்பீரமாகவும், கருணை உள்ளத்துடன் ராஜேஸ்வரி மேற்கொண்டுள்ள பணி காவல் துறையினருக்கு அளித்துள்ளதாக காணப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print