கொரோனா ஊரடங்கால் கடந்த இரண்டு ஆண்டுகள் நாம் நம்முடைய இயல்பான வாழ்க்கையில் இருந்து மாறுபட்டு கட்டுப்பாடுகளுடன் கூடிய வாழ்க்கை முறையினையே பின்பற்றினோம்.
திருமணங்களில் துவங்கி மிக முக்கியமான நிகழ்ச்சிகளுக்கும் மிகக் குறைவான நபர்கள் மட்டும் பங்கேற்கவே வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
உலக நாடுகள் முழுமையும் இந்தநிலையில் இருக்கையில் கொரோனா விதிமுறைகளை மீறி 2020 ஆம் ஆண்டு பிரதமரின் அலுவலகத்தில் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளை முன்னிட்டு விருந்து நடைபெற்றது.
கொரோனா விதிமுறைகளை மீறி நடைபெற்ற இந்த விருந்து விவகாரம் சர்ச்சைக்கு ஆளான நிலையில் லண்டன் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சர்ச்சை சம்பவத்தால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்ப அவரது கட்சியைச் சார்ந்தவர்களே அவரை பதவியில் இருந்து விலகக் கோரி வருகின்றனர்.
இதுகுறித்து போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் உருக்கமாக, “அனைவரும் மன்னித்துக் கொள்ளவும். மக்களின் கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
நாம் கண்ணாடியில் நம்மை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். செய்த தவறு குறித்து வருத்தப்படுகிறேன்.” என்று கூறியுள்ளார்.