ஒரே ராசி நட்சத்திரத்தில் திருமணம் முடிப்பது தவறா

பொதுவாக பெரும்பாலும் ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் முடிக்க மாட்டார்கள். சிலர் அப்படி திருமணம் முடிக்கவும் செய்கிறார்கள் இது தவறா சரியா என்று பார்ப்போம்.

திருமணம் முடிக்கும் பெண், மாப்பிள்ளை இருவருக்கும் ராசி ரீதியாக அனைத்து பொருத்தங்களும் பார்க்க வேண்டும் சில ஒரே ராசிகள் பொருந்தி போகும்.சில ராசிகள் பொருந்தாது.

ராசியையும் மீறி நாம் பார்க்க வேண்டிய பொருத்தம் இருவரது ஜாதகமும் நன்றாக பொருந்துகிறதா வேலை  செய்கிறதா என்று பார்க்க கூடிய கட்டப்பொருத்தம் ஆகும்.

கட்டப்பொருத்தமும் நன்றாக இருந்தால்தான் திருமணம் செய்வார்கள். ஒரே ராசி நட்சத்திரத்தில் சிலர் திருமணம் முடிக்கிறார்கள் அப்படி முடிப்பது நல்லவையா என்று பார்த்தால் சில விசயங்களில் சரி போல தோன்றும். உதாரணமாக  ஒரே ராசி நட்சத்திரத்தில் முடித்தால் இருவரது மனநிலையும் ஒத்துப்போகும் பல விசயங்களில் சண்டை சச்சரவுகள் வராது. இருவரது எண்ண அலைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளோ வேலை வாய்ப்புகளோ இருவருக்கும் அடுத்தடுத்து வரும் . இப்படி நன்மை வந்தால் சந்தோஷம்தான் ஒன்றும் பிரச்சினை இருக்காது. ஆனால் நன்மை போல தீமை வந்தால் இருவருக்கும் ஒன்று சொன்னது போல வரும். உதாரணமாக ஏழரை சனி காரணமாக கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகின்றது என வைத்துக்கொள்வோம் மனைவி வேறு ராசி என்றால் அவரோட திறமையில் கணவரின் உடல்நிலையை காக்க போராடி கணவரை நோய்களில் இருந்து மீட்டு விடுவார். இதுவே ஒரே ராசி என்றால் கணவருக்கு ஏழரை சனியால் சில பிரச்சினைகள் என்றாலும் மனைவியும் அதே ராசி என்பதால் அதற்கு நிகராக ஏதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது அப்போது மனைவியால் போராட முடியாது.

இதற்காகத்தான் ஒரே ராசி நட்சத்திரத்தில் திருமணம் முடிப்பது பிராக்டிக்கலாக தவிர்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.