குற்றம் நடப்பதை காவல்துறை வேடிக்கை பார்ப்பது மிகவும் ஆபத்தானது: உயர் நீதிமன்றம்

நாள்தோறும் சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் கூறிக்கொண்டே வரும். இந்த நிலையில் காவல் துறையை பார்த்து குற்றம் நடப்பதை வேடிக்கை பார்ப்பது ஆபத்தானது என்று கூறியுள்ளது. அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஒரு வழக்கு கூட பதியப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது என்று நீதிபதி சுப்பிரமணியம் கூறினார். தேசிய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க அறிவுறுத்த கோரி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

வழக்கில் சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார். இதில் தவறான வண்ணங்களில் விளக்குகளை பயன்படுத்தியதாக 4456 வழக்குகள் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருப்பு ஸ்டிக்கர் தொடர்பாக 4697 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தகவல் கிடைத்தது. தவறான நம்பர்  பிளேட் தொடர்பாக 1,55,331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் அனைவரும் சமமாக பார்க்கப்படுகிறார்கள் என்பதை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் நீதிபதி கூறினார்.

கிரிமினல்களும் இதுபோன்ற சின்னங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்கின்றனர் என்றும் நீதிபதி கூறினார். தமிழ்நாடு அரசுக்கும் காவல்துறைக்கும்  அறிவுறுத்த கோரிய வழக்கில் நாளை மறுதினம் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment