Entertainment
பிக் பாஸ் 3 லோஸ்லியா விவாகரத்து ஆனவர் என்பது உண்மையா?
பிக்பாஸ் 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாக போய்க் கொண்டு உள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் வனிதா, சாக்ஷி, அபிராமி, ஷெரின் ஒரு அணியாகவும் மதுமிதா மீரா மிதுன் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
சரவணன், ஃபாத்திமா பாபு, சேரன், தர்ஷன், முகைன், லாஸ்லியா ஆகியோர் பொதுவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

பிக்பாஸில் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தாலும் லாஸ்லியாவும், முகைனும் எந்தப் பிரச்சினையிலும் தலையிடாமல், தன் வேலையைப் பார்த்துக்கொண்டு உள்ளார். இவரின் அமைதியே இவருக்கு நிறைய ரசிகர்களைக் கொடுத்துள்ளது.
இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர், லோஸ்லியா ஆர்மி பிக் பாஸ் தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே தொடங்கப்பட்டது.
ஓவியாவை மிஞ்சும் அளவு ரசிகர்களைக் கொண்டவர் லோஸ்லியா, ஓவியாவைக் கூட நிகழ்ச்சி ஆரம்பித்து பல நாட்களுக்குப் பிறகுதான் மக்கள் மனத்தில் இடம்பெற்றார்.
ரசிகர்களின் மனதினைக் கொள்ளை கொண்ட லோஸ்லியாவைப் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது, அதாவது லாஸ்லியாவுடன் படித்த ஒருவர் அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் விவாகரத்து கூட ஆனது என்றும் டுவிட் போட்டுள்ளார். இந்த டுவிட் இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதனால் லோஸ்லியா ஆர்மி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
