மக்கள் என்ன மொழி பேச வேண்டும் என்பது அவர்களின் முடிவு!!: அமித் ஷாவுக்கு கடும் கண்டனம்;
நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கருத்து தற்போது சரியான ஒன்றாக மாறியுள்ளது. ஏனென்றால் நம் இந்தியாவானது மொழி சார்பற்ற நாடாக காணப்படுகிறது.
இதனால் நம் இந்தியாவில் மூவாயிரத்துக்கும் அதிகமான மொழிகள் காணப்படுகின்றன. எனவே ஆங்கிலத்திற்கு மாற்ற இந்திய கற்பது இந்தித் திணிப்பு போல் காணப்படுவதால் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வன்மையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்தித் திணிப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமித்ஷாவுக்கு தமிழகம் மட்டுமின்றி தெலுங்கானா மாநிலத்திலும் கண்டனம் எழுந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி அமித்ஷாவுக்கு தெலுங்கானா அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்திய ஏற்கவேண்டும் என்ற அமித்ஷா பேச்சுக்கு தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்; வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம் என்றும் கே.டி.ராமராவ் கூறினார். மக்கள் எதை உண்ண வேண்டும் , என்ன மொழி பேச வேண்டும், எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
