Connect with us

அரசை ஸ்தம்பிக்க வைப்பதே எங்கள் வேலை! கிராமசபை போல நகரசபை வேண்டும்!

kamalhassan

தமிழகம்

அரசை ஸ்தம்பிக்க வைப்பதே எங்கள் வேலை! கிராமசபை போல நகரசபை வேண்டும்!

அரசை ஸ்தம்பிக்க வைப்பதே எங்கள் வேலை! கிராமசபை போல நகரசபை வேண்டும்!

சினிமா துறையில் உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த கமலஹாசன் பலரும் எதிர்பாராத விதமாக அரசியலுக்குள் நுழைந்தார். நுழைந்த கையோடு அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நிறுவினார்,

இந்த கட்சி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் எதிர்பாராத விதமாக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை அடைந்தது. இருந்தாலும் கவலை இன்றி மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் அடுத்தடுத்து கட்சிப் பணியில் தீவிரம் காட்டிக் கொண்டு வந்தார்.

இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வரிசைகட்டி வேட்பாளர் பட்டியலை கமலஹாசன் வெளியிட்டு வந்தார். இத்தகைய மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி இன்றோடு ஐந்தாவது ஆண்டு நிறைவு பெற்றுள்ளது.

இதனால் ஐந்தாவது ஆண்டு கொண்டாட்டத்தை மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் கொண்டாடிக் கொண்டு வருகின்றனர். அப்போது பேசிய அவர் நோட்டாவை பார்த்தும் எங்களை பார்த்தும் சிலருக்கு பயம் இருப்பதாக கூறினார்.

அதன் பின்னர் அவர் தலைமைச் செயலாளரை சந்தித்து பின்னர் மறுபடியும் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி அரசை ஸ்தம்பிக்க வைப்பது தான் எங்கள் வேலை என்று கூறினார்.

சரிவர செயல்படாமல் இருக்கும் அரசை ஸ்தம்பிக்க வைப்பது தான் எங்களின் வேலை என்று கமலஹாசன் கூறினார். அறவழியில் போராட்டம் செய்வதே எங்கள் வேலை, போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைப்பது அல்ல என்றும் கமலஹாசன் கூறினார்.

கிராமசபை போல நகர் பகுதிகளுக்கு நகரசபை வார்டு சபை அமைக்கப்பட வேண்டும் என மனு அளித்துள்ளோம் என்றும் கமலஹாசன் கூறினார். நமக்கு எதுக்கு என ஒதுங்கி இருப்பதால்தான் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது என்று கமலஹாசன் கூறினார் .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top