Tamil Nadu
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை: பள்ளிக்கல்வி இயக்குனர்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருவது தெரிந்ததே. இதனிடையே பள்ளிகள் திறக்கப்பட்ட 4 நாட்களில் ஒரு சில மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு உள்பட மற்ற வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்
மாணவர்கள் நலன் முக்கியம் என்றும் கூடுதலாக மாணவர்களை அனுமதித்தால் பள்ளிகளில் இட நெருக்கடி ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் எனவே இப்போதைக்கு மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்
மேலும் பொதுத்தேர்வு பணிகளை உரிய விதிகளை பின்பற்றி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
