ஆட்டோவில் பள்ளி குழந்தைகள் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஐகோர்ட் கிளை!

தனியார் பள்ளி கல்லூரி நிறுவனங்கள் குழந்தைகளை ஆட்டோ, ரிக்‌ஷாக்கள் மூலம் அழைத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாகர் கோயிலை சேர்ந்த சுயம்பு லிங்கம் என்பவர் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், கல்வி நிறுவனங்கள் தங்களது வாகனங்களை முறையாக பராமறிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் பந்த் சட்டவிரோதம் – அவசர வழக்கு இன்று விசாரணை!!

அதே போல் பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறங்களில் இருக்க வேண்டும் என்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்திருக்க வேண்டும் என்ற பல விதிமுறைகள் இருந்தது.

ஆனால் தற்போது தனியார் பள்ளிகளின் வாகனங்கள் பராமரிப்பு விதிமுறைகள் நடைமுறையில் இல்லையென அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா?

இந்த மனு மீதான விசாரணை அமர்வானது இன்று வந்தது. அப்போது அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி வாகனங்களில் ஒரே மாதிரியான விதிமுறைகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் பள்ளி வாகனங்களுக்கு விதிமுறைகள் இருப்பதாகவும், ஆட்டோ, ரிக்‌ஷாக்கள் மூலம் வருவதற்கு என்ன விதிமுறைகள் உள்ளது? என தெரிவித்தனர். மேலும், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment