இனி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை இது கட்டாயம்!- தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை;
தமிழகத்தில் தொடர்ச்சியாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கவனிப்பு மிகவும் மும்முரமாக நடைபெறுகிறது. அதுவும் குறிப்பாக பள்ளி மாணவர்களை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து கொண்டு இருக்கிறது.
ஏனென்றால் நேற்றைய தினம் தமிழகத்தின் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பட்டியலை வெளியிட்டு இருந்தார்.
அதிலும் குறிப்பாக மே 13ம் தேதி தான் தமிழகத்தில் நடப்பாண்டிற்கான கடைசி நாள் என்று அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் 2022-2023 ஆம் ஆண்டு பள்ளி வகுப்புகள் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாணவர்களுக்கு மற்றொரு கட்டாய பயிற்சி ஒன்றை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு கூட்டாக உடற்பயிற்சி அளிக்க வேண்டுமென தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சார்பில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
