
தமிழகம்
பாஜகவை நுழைய விடாமல் இருப்பது மாணவர்களின் கையில் உள்ளது;-அமைச்சர் நேரு
புதிய கொள்கைக்கு எதிராக திமுகவில் உள்ள அனைவரும் குரல் கொடுத்து வருகின்றனர். நேற்றைய தினம் கூட நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த கல்லூரிக்கு அனுப்ப நிகழ்ச்சி விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து பேசினார்.
இன்றைய தினம் தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திருச்சி ஜமால் கல்லூரி நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு மாணவர்களிடையே இது குறித்து பேசியுள்ளார்.
மேலும் மாணவர்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் மற்றுமொரு அமைச்சர் பாஜக வராமல் இருப்பது மாணவர்கள் கையில் தான் உள்ளது என்று மாணவர்களை நம்பி கூறியுள்ளார்.
அதன்படி மூன்றாம் வகுப்பிலிருந்தே நுழைவுத் தேர்வு வைத்து பாஜக எப்படியாவது நுழைய முயற்சிக்கிறது என்று அமைச்சர் நேரு கூறினார். பாஜகவை நுழைய விடாமல் இருப்பது மாணவர்களின் கையில் தான் உள்ளது என்று திருச்சியில் அமைச்சர் கே என் நேரு பேசினார்.
