வடமாநிலங்களில் வாட்டி வதைக்கிறது கடுங்குளிர்! மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸில் வெப்பநிலை பதிவு!!

பொதுவாக டிசம்பர் மாதம் என்பது உலகில் உள்ள பல நாடுகளுக்கும் பனிமழை பெய்யும் மாதமாக இருக்கும். நம் இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் கடும் குளிர் நிலவும். இந்த நிலையில் பல பகுதிகளில் மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களை வாட்டி எடுக்கிறது கடுங்குளிர். ராஜஸ்தானில் சுரு என்னும் இடத்தில் இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் அந்த பகுதியில் வாழும் மக்கள் கடும் குளிரில் உள்ளனர். பஞ்சாபின் அமிர்தசரஸில் உறைபனி பொரிந்தவுடன் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய மலையான இமய மலைத்தொடரில் அமைந்துள்ள இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிர் நிலவுகிறது. லகால் ஸ்பிடி மாவட்டத்தில் இரவுநேர குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் செல்சியசுக்கு கீழ் குறைந்துள்ளதால் சிசு ஏரியில் நீர் உறைந்து போனது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment