Connect with us

பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் எடுத்து வர தடை..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..

167139 mobileweb

தமிழகம்

பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் எடுத்து வர தடை..! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் ஆசிரியர்களை அடிக்க செல்வது போன்ற  சர்ச்சைகள் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  “ஃபார்வெல் டே” நடத்த பள்ளிநிர்வாகம் மறுத்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் வகுப்பறைகளில் உள்ள மேஜைகளை அடித்து உடைத்த காட்சிகள் சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் பரவியது. இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட 10 மாணவர்கள், பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனிடையே பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் செல்போன்களை எடுத்து வர தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறும் மாணவர்களில் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு மாணவர்களையும் ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடாதவாறு கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top