Connect with us

இது வாழ்வா…… சாவா…… போர்….! உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் பேச்சு!

ukranie

செய்திகள்

இது வாழ்வா…… சாவா…… போர்….! உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் பேச்சு!

இது வாழ்வா…… சாவா…… போர்….! உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் பேச்சு!

இன்று காலை ரஷ்ய அதிபர் உக்ரைன் நாட்டின் மீது போர் புரிய உத்தரவு கொடுத்திருந்தார். இதன் காரணமாக ரஷிய படைகள் தீவிரமாக ஒரே நாட்டிற்குள் சென்று போர் புரிந்து கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக துறைமுகங்கள், விமான நிலைய கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஷ்யா வெறும் ராணுவ தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளது. உக்ரைனில் குடியிருப்பு பகுதியில் ரசியா தாக்குதல் நடத்தவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இந்தப் போர் வாழ்வா…. சாவா…. என்ற நிலையில் நடைபெறுகிறது என்றும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் முழுவீச்சில் தாக்குதல் நடத்திக் கொண்டு வருகின்றன.

இவ்வாறு உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் உக்ரைன் அதிபருடன் அமெரிக்க அதிபர் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசி மூலம் பேசினார். உக்ரைன் மீது cரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

உக்ரைன் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க G7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. உக்ரைன் மீது மேலும் பல பொருளாதார தடைகளை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top