#Breaking மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம்; மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை!

மனித கழிவுகளை அள்ளுவதற்கு மனிதர்களை பயன்படுத்தினால் மாவட்ட ஆட்சியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த பொது நல மனு மீது இன்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரணை நடத்தியது.

இந்தியாவில் தூய்மை பணியாளர்கள் தங்களது கைகளால் மனித கழிவுகளை சுத்தம் செய்வது, பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, கழிவு நீர் சுத்தம் செய்வது குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

மனித கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் பொழுது பல பணியாளர்கள் உயிரிழந்ததை அடுத்து உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் இதற்க்கு தடை விதித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இதனை செயல்படுத்தும் விதமாக மனித கழிவுகளை மனிதரை அழுவது முற்றிலும் 2013 ஆம் மனித சக்தியை கொண்டு எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இருந்த போதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மனித கழிவுகளை மனிதர்களை எடுக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது இதனால் வருடம் தோறும் நூற்றுக்கணக்கானோர் இறந்தும் போகின்றனர் எனவே மனித கழிவுகளை இயந்திரங்களை கொண்டு ரோபோட் முறையில் அள்ளுவதற்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது குறித்து அரசு பல்வேறு சுற்றறிக்கைகள் அனுப்பி உள்ளது மனித கழிவுகளை மனிதனே அழுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.

மனுதாரர் தரப்பில் கழிவுகளை மனிதர்கள் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கையில் அள்ளுவது போன்ற புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை பார்த்து கோபம் அடைந்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் மனித கழிவுகளை அகற்ற மனிதனை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரை பணியிடை நீக்கம் செய்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் மனுதாரர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புகைப்படங்கள் எங்கே எடுத்தது, எப்பொழுது எடுத்தது போன்ற முழு விவரங்களோடு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மனுதாரர் குறிப்பிடும் ஆவணங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தலைமைச் செயலருக்கு உத்தரவு பிறப்பிப்போம் எனவும் எச்சரித்தனர்.

மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்கள் முறைகேடாக பொய்யான ஆவணமாக இருப்பின் மனுதாரருக்கு அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனித கழிவுகளை மனிதன் அள்ளுவது குறித்து தடை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆவணங்களையும் அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment