Connect with us

வீட்டு அஸ்திவாரக் குழி நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

water death

செய்திகள்

வீட்டு அஸ்திவாரக் குழி நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

அம்மாபேட்டை அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட அஸ்திவாரக் குழியில், தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு. ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியை சேர்ந்தவர் குருசாமி – சரண்யா தம்பதியினர் இவர்களுக்கு புஷ்பராஜ்(13) அபினேஷ்(6) என்ற இரு மகன்களும் ஹர்த்திகா(3) இன்று மகளும் உள்ளனர்.

அபினேஷ் (6) ஊமாரெட்டியூரில் உள்ள அரசு பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறான், வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வந்த அபினேஷ் அருகில் விளையாட சென்று விட்டான், இரவு 8 மணி ஆகியும் மகன் வீட்டுக்கு வராததால் அவனது பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர்.

அப்போது அருகில் ராமகிருஷ்ணன் என்பவர் புதிதாக வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழி அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர், இந்நிலையில் அங்கு சென்று தேடி பார்த்த போது அஸ்திவாரம் தோண்டப்பட்ட குழியில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது அந்த தண்ணீரில் சிறுவன் மூழ்கி இருப்பது தெரியவந்தது,

உடனடியாக சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சிறுவனை பரிசோதனை செய்து மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அருகே உள்ள சிசிடிவி கேமராவின்பதிவை பார்த்த பொழுது சிறுவன் மாலை சுமார் 5 மணியளவில் கட்டிடம் கட்ட அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட குழியில் ஒவ்வொரு குழியாக இறங்கி ஏறி விளையாடிக் கொண்டிருப்பது தெரியவந்தள்ளது.

அதில் அதிக ஆழமுள்ள குழியில் இறங்கியதன் காரணமாக சிறுவன் மேலே ஏற முடியாமல் மூழ்கி இறந்ததும் தெரிய வந்ததுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top