இந்த கேள்வி கேட்கும் போது ரொம்ப வலிக்கும்… என்னோட கேரக்டர் இது தான்… பரத் எமோஷனல்…

பரத் ஸ்ரீனிவாசன் என்ற இயற்பெயரைக் கொண்ட பரத் நடிகர் மற்றும் நடன கலைஞர் ஆவார். இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

2004 ஆம் ஆண்டு ‘காதல்’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. பின்னர் அதே ஆண்டு விஷால் நடித்த ‘செல்லமே’ திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தார் நடித்தார். 2006 ஆம் ஆண்டு ‘பட்டியல்’, ‘எம்- மகன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

எம்-மகன் திரைப்படம் பரத் அவர்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ‘வெயில்’, ‘பழனி’, ‘கண்டேன் காதலை’ ஆகிய நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது நீண்ட இடைவேளை எடுத்துக் கொண்ட பரத் அவர்கள் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்ட பரத் அவர்கள் தனது சினிமா வாழ்க்கையைப் பற்றி எமோஷனலாக பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், தமிழ் சினிமாவிற்குள் எளிதாக வந்துவிட்டேன். ஆனால் அதில் நீடிப்பது என்பது எளிதான விஷயம் இல்லை. முதலில் நல்ல நல்ல படங்கள் என்னைத் தேடி வந்தது, எல்லாம் நல்லா போச்சு, ஆனால் காலங்கள் மாறும் போது மக்களின் எதிர்பார்ப்பு எல்லாம் மாறும். அதை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதுக்கு டைம் வேண்டும், எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பா நடக்கும், எனக்கு கிடைக்கவேண்டியது கண்டிப்பா எனக்கு கிடைக்கும் அப்படினு நம்புறவன் தான் நான். நான் அப்படிப்பட்ட கேரக்டர் தான். இந்த டைம்ல ஒரு சில பேர் என்கிட்ட வந்து என்ன நீங்க படம் பண்றது இல்லையா அப்படினு கேள்விக் கேக்கும் போது எனக்கு வலிக்கும். ஒரு சில விஷயங்கள் நடக்கிறதுக்கு டைம் எடுக்கும். அதுக்கான ஸ்பேஸ் கொடுத்தாங்க அப்படினா நல்லா இருக்கும் என்று எமோஷனலாக பேசியுள்ளார் பரத்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...