புயலை போன்று இதற்கு கண் இல்லை; அதனால் கணிக்க முடியாது! ஆனால் சென்னைக்கு மழை உறுதி!

வானிலை மையம்

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு மிக அருகில் அமைந்துள்ளதாக காணப்படுகிறது. அதன்படி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 75 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு  மண்டலம்

முதலில் 24 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த நிலையில் தற்போது திடீரென்று 4 கிலோ மீட்டர் வேகத்திற்கு குறைந்துள்ளதாக காணப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் சென்னை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஆனால் தனியார் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கரையை கடக்க தொடங்கி உள்ளதாக கூறியுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீள்வட்டமாக நகர்வதால் புயலை போன்று இதற்கு கண் என்னும் மையப்பகுதி ஒன்றுமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

 

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

புயலை போன்று காற்று மண்டலத்தில் திசையை துல்லியமாக கணிக்க இயலாது என்றும் வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.சென்னை முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை நீண்டு பரவியுள்ளதால் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என கணிக்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே மாலை 5:30 மணி முதல் இரவு 7 மணி வரை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை நோக்கி நகர்வதால் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் மழை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print