இந்த மாதிரி நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு… பல வருட உழைப்பிற்கு பின் அது நிறைவேறியது… வடிவேல் நெகிழ்ச்சி…

குமாரவடிவேல் நடராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவராவார். கல் நெஞ்சையும் கரைய வைத்து மனம் விட்டு சிரிக்க வைக்கும் வடிவேலு அவர்களின் நகைச்சுவை. இவருக்கு வைகைப்புயல் என்ற புனைபெயரும் உண்டு.

ஆரம்பத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த வடிவேலு அவர்கள் கண்ணாடி வெட்டும் தொழிலை செய்து வந்துள்ளார். அவ்வப்போது ஓய்வு நேரங்களில் உள்ளூர் மேடை நிகழ்ச்சிகளில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்துள்ளார். ஒருநாள் ரயில் பயணத்தின் போது நடிகர் ராஜ்கிரணை சந்தித்த வடிவேலு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கி தருமாறு கேட்டுக்கொண்டார். ராஜ்கிரண் அவர்களும் ‘ என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஒப்புக்கொண்டார்.

80களில் கவுண்டமணி-செந்தில் ஆகியோரின் நகைச்சுவை கூட்டணி உச்சத்தில் இருக்கும் காலகட்டத்தில் வடிவேலு சினிமாவில் அறிமுகமானார். நடிகர் விஜயகாந்த் அவர்களும் வடிவேலுவை ஆரம்பித்தார். சின்ன கவுண்டர் படத்தில் சிபாரிசு செய்து ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிற்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார்.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட வடிவேலு அவர்கள் படிப்படியாக தனது திறமையால், தனித்துவமான நகைச்சுவை, பாடி லாங்குவேஜ், வித்யாசமான வேடங்கள் என மக்களை கவர்ந்து அனைவரையும் வாய் விட்டு சிரிக்க வைத்தார். இன்று எந்த மீம் ஆனாலும் வடிவேலு அவர்களின் தோற்றம் கச்சிதமாக பொருந்தும். மீம் உலகின் அரசன் என்றால் அது வடிவேலு என்றே சொல்லலாம்.

பின்னர் தனியாக நகைச்சுவை படத்தில் முன்னணி நடிகராக நடித்தார். அவை ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ (2006), ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ (2008), தெனலிராமன் (2014) ஆகியவை ஆகும். இப்படங்களைப் பற்றி பேசிய வடிவேலு, ஒரு அரசனாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு, பல வருட முயற்சிக்குப் பின் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, தெனாலிராமன் போன்ற திரைப்படங்கள் மூலம் அது நிறைவேறியது என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் வைகைப்புயல் வடிவேலு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...