Connect with us

ஐடி ஊழியரின் வெறி செயல்-தாம்பரம் போலீசார் விசாரணை..!!

தற்கொலை

தமிழகம்

ஐடி ஊழியரின் வெறி செயல்-தாம்பரம் போலீசார் விசாரணை..!!

தினம்தோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் ஐடி  ஊழியர் ஒருவர் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பொழிச்சலூர் அருகே குடும்பத்தினரைக் கொலை செய்துவிட்டு ஐடி  ஊழியர் தற்கொலை தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்ளும் போது கடிதம் ஒன்றை எழுதி வைத்து, அதை சுவற்றில் ஒட்டி விட்டு இறந்துள்ளனர். சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் உள்ளது என்றும் போலீசார் கூறியுள்ளார்.

மின்ரம்பத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து கடந்த 19ஆம் தேதி பெற்றுள்ளனர் என்றும் தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறியுள்ளார். செல்போனை கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தி கடன் தொல்லை இருக்கிறதா எனவும் விசாரணை நடைபெறுவதாக காவல் ஆணையர் கூறியுள்ளார்.

தடயவியல் துறையினர் கொலை தொடர்பாக ஆய்வு செய்து கொண்டு வருகின்றனர் என்றும் தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறியுள்ளார்.

இரவு 11 மணிக்கு மேல் கொலை சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு சரியான நேரம் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.

மயக்க மருந்து கொடுத்து கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது, ரூபாய் 3.50 லட்சம் கடன் பத்திரம் கிடைத்துள்ளது என்றும் காவல் ஆணையர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top