வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல ஏற்கனவே பூகம்பத்தால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் என்ற பகுதியில் உள்ள உளவுத்துறை தலைமை அலுவலகம் மற்றும் பாதுகாப்புத்துறை அலுவலகம் உள்ள கட்டிடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அந்த கட்டிடம் பலத்த சேதம் அடைந்ததாகவும் ராணுவ வீரர் ஒருவர் உள்பட 15 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை சிரியா மீது இஸ்ரேல் நிகழ்த்தியுள்ள நிலையில் இது மேலும் ஒரு தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சிரியாவில் சமீபத்தில் நிகழ்ந்த பூகம்பம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் தற்போது இஸ்ரேலின் தாக்குதல் காரணமாகவும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது