தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன் முதன்முறையாக இயக்குனராக என்ட்ரி கொடுத்து , இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி திரைப்படம் உருவாக்கப்பட்டது.
இப்படமானது கடந்த மாதல் ஜூலை 1-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகியது. இந்நிலையில் இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்த சூழலில் ராக்கெட்ரி திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட 90 சதவீத தகவல்கள் பொய்யானவை என இஸ்ரோவில் பணியாற்றிய முன்னாள் விஞ்ஞானிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
அதன்படி, இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளான ஏ.வி முத்துநாயகம், இவிஎஸ் நம்பூதிரி, சசிகுமார் உள்ளிட்டோர் படம் தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியதில், படத்தில் வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தனர்.
விஞ்ஞானி முத்து நாராயணன் கூறுகையில் படத்தின் தெரிவிக்கும் தகவல்கள் பொது மக்களை தவறாக வழி நடத்துவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே நாராயணன் திரைப்படம் மற்றும் ஊடகங்களில் பொய்யான தகவல்களை தெரிவித்து இஸ்ரோ மற்றும் விஞ்ஞானிகளை அவமானப்படுத்த இருப்பதாக கூறியுள்ளனர்.
இதன் காரணமாக சில விஷயங்களை வெளியிட வேண்டிய கட்டாய நிலைமைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டதால் கிரையோஜெனிக் வளர்ச்சியில் தாமதம், நாட்டிற்கு நிதி இழப்பு ஏற்பட்டது என தகவல் பரப்புவது தவறானது என்று கூறியுள்ளார்.
இஸ்ரோ 1980-களின் மத்தியில் கிரையோஜெனிக் உருவாக்கும் பணியை தொடங்கியதாகவும், ஈபிஎஸ் நம்பூதிரி தலைமை தாங்கிய திட்டத்தில் நாராயணனுக்கு எந்த தொடர்பும் கிடையாது என கூறியுள்ளது. அதே போல் கிரையோஜெனிக் எஞின் தயாரிப்பில் நாராயணன் பணி எதுவும் கிடையாது கூறியுள்ளார்.
விகாஸ் என்ஜினுக்குப் பின்னால் நாராயணன் இருந்தார் எனக் கூறுவது தவறானது என்றும் ஏ.பி.கே அப்துல் கலாம் தவறை திருத்தினார் என கூறுவது எல்லாம் தவறு தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இப்போதைய இஸ்ரோ தலைவர் சோமநாத்யிடம் கேட்டுக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.